கடவுளாகவும் வேண்டாம் மிருகமாகவும் வேண்டாம் ரசிகனாயிரு ஒவ்வொன்றோடும் ரசனையோடு பழகு

Sunday, July 21, 2013

மரியான் - கடல் ராசா




பொதுவாவே கடைசியா வந்த தனுஷ் படங்கள் தனுஷ் தவிர யார் நடிச்சாலும் நல்லா இருக்காதுன்னே சொல்லலாம் அதேதான் மரியான் !! தனுஷ் இல்லைன்னா படம் பத்து நிமிசத்துலையே மரிச்சு போயிருக்கும் கேட்டோ..!! எப்பிடியோ எனக்கு படம் ரொம்ப பிடிச்சுது. நான் எப்பிடி எதிர் பார்த்து போனேனோ அதே மாதிரி வந்ததாலயும் எனக்கு பிடிச்சிருக்கலாம் 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. 
படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல. படத்துல மிகப்பெரிய பிளஸ்ன்னா அது தனுஷ்.!! தனுஷ்.!! தனுஷ் ரெண்டரை மணிநேரம் படத்தை உட்கார்ந்து பார்க்க முடிஞ்சதுக்கு முதல் காரணம் தனுஷ்தான் !!! நான் நினைக்கல அடுத்ததா போலீஸ்,மிலிட்டரின்னு நடிச்சா கூட இந்த பயபுள்ளைக்கு பொருத்தமா இருக்கும் போல எதை நடிச்சாலும் அப்பிடியே இருக்காப்ல.  இப்போ இந்த 'ஜெனரேஷன்'ல இருக்குற 'ஹீரோஸ்'ல 'ரியலான ரொமாண்டிக்' நடிப்புக்கு தனுஷை அடிச்சுக்க யாருமே இல்லைன்னுதான் சொல்வேன். அடுத்ததா படம் முடிஞ்சு வெளில வர்றப்ப மனசுல நிக்குறது மரியானுக்கு அடுத்து பனிமலர் தான். பார்வதி மேனன். 'பூ' ல பார்த்த பார்வதியா இதுன்னு நம்ப முடியல அவ்வ்வ்ளோ அழகு !! நடிப்பை சொல்ல வேணாம் 'பூ'லயே பார்த்தாச்சு. வர்ற எல்லா சீன்லயும் பின்னியிருக்கு இந்த புள்ள. தனுஷுக்கு அடுத்ததா இந்த படத்தை தாங்கி வச்சிருந்தது பார்வதின்னு தான் சொல்லணும் !!







இவங்க ரெண்டு பெரும் நடிப்புல பின்னியிருக்கும் போது அதை அவ்ளோ அழகா படமாக்கின விதம்தான் ரொம்ப அழகு. ஒளிப்பதிவு "Marc Koninckx"ன்னு ஒருத்தர் பண்ணியிருக்காப்ல.நெட்ல வந்து முதல்ல அதைத்தான் பார்த்தேன் மேல்கடல், ஆழ்கடல், பாலைவனம்ன்னு எல்லாமே அழகா இருக்கு. படம் அழகா இருந்ததுக்கு முதல் முக்கிய காரணமே ஒளிப்பதிவுதான்..!!
மேல் அடுத்ததா நம்ம ஏ.ஆர்.ரஹ்மான். "கடல்" மாதிரி இல்லாம இந்த படத்துக்கு பேக் ரவுண்ட் மியூசிக்கா இருந்தாலும் சரி பாடல்களா இருந்தாலும் சரி பின்னியிருக்காப்ல. ஒவ்வொரு பாடலும் ஆடியோல கேட்டதை விட ஸ்க்ரீன்ல வரும்போது அவ்ளோ அழகு.
படத்துல மைனஸ்ன்னு எனக்கு பட்டது ஒண்ணுதான் கடைசில வர்ற ஒரு 30 நிமிஷம். கடைசி 30 நிமிஷம் கொஞ்சம்நீளமா இருக்கு. பாலைவனத்துல வர்ற காட்சிகள் கொஞ்சம் குறைச்சிருக்கலாம். புலி எல்லாம் வராமலே விட்டிருக்கலாம். ஆபிரிக்கால கடத்தி வச்சிருந்து தப்பி வரும்போது மனசு எவ்ளோ பயப்பிடும்ன்னு காட்டுறதுக்காக அந்த காட்சி வச்சிருக்காங்க ஆனா ஏற்கனவே ரொம்ப நேரமா பாலைவனத்துலயே போகும்போது அந்த காட்சியை வச்சிருக்க வேணாம். ஏற்கனவே தனுஷ் பயந்து பயந்து நடிச்சு அசத்தியிருக்கும் போது எக்ஸ்ட்ராவா அது வைக்காம விட்டிருக்கலாம் . இதுலயும் சைக்கோவான்னு திக்கு திக்குன்னு படம் பார்க்க வேண்டி இருந்திச்சு. மத்தபடி ஜெகன், அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சின்னு எல்லாரும் தங்களோட கேரக்டரை நல்லாவே செய்திருக்காங்க. உமா ரியாஸுக்கும் சலீம் குமாருக்கும்தான் நடிப்பை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கல. அதுலயும் சலீம் குமார் மலையாளத்துல அவ்ளோ பெரிய நடிகரை சரியா யூஸ் பண்ணிக்கல.
ஆனா எல்லாத்தையும் மறந்து படம் முடியும் போது நெஞ்சு முழுக்க மரியானும் பனிமலரும்தான் நிறைஞ்சு போயிருக்காங்க. மரியான் என்னை பொறுத்த வரைக்கும் கடல் ராசாதான்..!!




Monday, July 8, 2013

மயில் இல்லாத சிங்கம் (சிங்கம் II)


எத்தனை விமர்சனம் வாசிச்சிருந்தாலும் நம்ம புத்திக்கு எட்டினது இம்புட்டுத்தான் ... 

வாங்கலே !!! 









PLUS :-
• எனக்கு இந்த படத்துலையே உடன பிடிச்சதுன்னு சொல்ல கூடியது சூர்யாவோட டான்ஸ் இதுக்கு முதல் வந்த எல்லா படங்களை விடவும் நல்லா இருக்கு (முக்கியமா சிங்கம் டான்ஸ்ல)
• சந்தானம் & விவேக் காமெடி
• ஹரியோட வேகமான திரைக்கதை
• இது எல்லாத்தையும் விட முக்கியமா "சூர்யா" என்னதான் சூர்யாவை மொக்கை பண்ணினாலும் இந்த கேரக்டரை சூர்யாவை விட யாரும் நல்லா பண்ணியிருக்க முடியாது !!
• அனுஷ்கா (ஹி ஹி ஹி அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல இது ப்ளஸ்ஸாதான்பா தெரியுது)



MINUS :-
• வில்லன்ஸ் (அமெரிக்கா அந்தார்டிக்கா தவிர எல்லா நாட்டுல இருந்தும் வர்றாங்க)
• சண்டை காட்சிகள் (முன்ன எல்லாம் விஜய் படத்துல எதையெல்லாம் நக்கல் பண்ணுவாங்களோ அதெல்லாத்தையும் கரெக்ட்டா பாலோ பண்ணியிருக்காங்க)
• பஞ்ச் வசனங்கள் (அடிக்கடி கேப்டனோட விருதகிரி படம் இந்த பாழப்போன புத்தியில வந்து பெல் அடிக்குது முக்கியமா ஆபிரிக்க வில்லன்கிட்ட போன்ல சவால் விடுற சீனல வேணாம் மகி வேணாம் மகின்னு கெஞ்சினாலும் பாழாப்போன புத்தி கேக்க மாட்டேங்குதே)
• சாதாரண வசனங்கள் (அதையும் சூர்யா பஞ்ச் மாதிரியே சொல்லுறதால எது என்ன பீலிங்ல சொல்லுறார்னு பிரிச்சு பார்த்து புரிஞ்சுக்க முடியல)
• தேவி ஸ்ரீ பிரசாத் (சூர்யா 'டி.எஸ்.பி'யா கத்துறதை கூட சகிச்சுக்கலாம் போல இருக்கு இந்த 'டி.எஸ்.பி' போட்ட மியூசிக் சகிச்சுக்க முடியல "சிங்கம் டான்ஸ்" தவிர எந்த பாடலுமே நல்லா இல்ல பேக்ரவுண்ட் மியூசிக் காதுல ஈயம் காய்ச்சி ஊத்தின பீலிங்)
• ஹன்சிகா (சத்தியமா ஜீரணிக்க முடியல !!!)

• இது எல்லாத்தையும் விட முக்கியமான குறை நம்ம மயில்வாகனம் படத்துல இல்லாததுதான். சிங்கம் I ல அவசரப்பட்டு கொன்னுட்டாங்க அதனால தானோ என்னவோ இதுல ஒரு வில்லனையுமே கொல்லாம விட்டிருக்காங்க சிங்கம் III க்கு ப்ளான் பண்ணுறாங்களோ என்னவோ !! நடக்கிறது நடக்கட்டும் 

Saturday, February 16, 2013

விஸ்வரூபம்




கமல் படம் என்றாலே எவ்வளவு சர்ச்சை கிளம்புகிறதோ அந்த அளவுக்கு படத்தில் சரக்கு இருக்கும் என்பது சர்வ நிச்சயம்...!!!
விஸ்வரூபதிலும் அதை பெரிதும் எதிர்பார்த்தேன். எதிர் பார்த்தது போலவே படம் மேலோட்டமாக பார்த்தால் சிறப்பாகவும் ஆழமாக பார்த்தால் அருமையாகவும்  இருந்தது.படத்தின் டிவிடிக்கள் ஏற்கனவே வந்து விட்டாலும் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன். 
இந்தியாவில் தமிழ்நாட்டில் படம் வெளியான பின்பும் கூட இங்கு வெளியாகவில்லை. இருந்தும் காத்திருந்தேன். ஒரு வழியாக படமும் ரிலீஸ் ஆனது. முதல் நாளே பார்ப்பதற்க்கு போனால் பாதி இருக்கைகள் கூட நிரம்பாத நிலை. எப்படியோ ஒரு வழியாக பார்த்தாயிற்று.
கமல் எப்போது வருவார் என்று 
எதிர்பார்த்து காத்திருந்தால் உன்னை காணாது நான் இன்று நானில்லையே என்று சற்றும் எதிர் பாராமல் திரையில் தோன்றினார் அந்த பாடலில் கொஞ்ச அழகான பொண்ணுங்க ஆடினாங்க இருந்தாலும் எல்லாரோட கண்ணும் கமல் மேலேதான் இருந்திருக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு பிரேமிலும் மனுஷன் என்ன முகபாவனை என்ன நடிப்பு!! 



சரி இப்படி இருக்கும் கமல் எதோ ஒரு கட்டத்தில் அதிரடியாக மாற போகிறார் என்பது புதிதாக சினிமா பார்ப்பவனுக்கும் புரியும் என்றாலும் எப்படி மாறுகிறார் என்பதில் தான் கமல் ஜெயித்திருக்கிறார். எல்லோரையும் அடித்து விட்டு திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். ஹீரோயின் எப்படி பார்க்கிறாரோ அப்படியே எல்லாரும் பார்த்து கொண்டிருந்தனர். அதிலும் ஆக்சன் ரீப்ளேயாக ஆரம்பிக்குமே எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் என்று அது படத்துக்காக பிரச்சனை பண்ணிய அத்தனை பேருக்குமே பதிலடியாக அமைந்திருக்கும். (படத்தில் அதற்காக அந்த காட்சி வைக்கபடவில்லை)


சரி கதை ஆரம்பிச்சாச்சு என்று இருந்தால் அடுத்த காட்சியில்  அல்கைதாவுக்கு பயிற்சி வழங்குவதற்காக கமல் வந்தார் என்று பிளாஷ்பேக் ஆரம்பமாகும். அதோடு கமல் அனைவரையும் கட்டி போட்டேவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான ஜிகாத் போராளிக்கு கூட அந்த உடை தாடி அப்படி பொருந்துமா என்பது சந்தேகம்தான்.
இந்த படத்துக்கு எதற்கு இத்தனை தடை என்பது புரியவில்லை. படத்தில் முஸ்லிம்களை எதுவும் கேவலப்படுத்தவில்லையே!!  அமெரிக்க ராணுவம் பெண்கள் குழந்தைகளை கொல்லாது என்ற வசனம் அமெரிக்காவிடம் பாராட்டு பெற கமல் வைத்தார் என்பவர்கள் படத்தை இன்னும் நான்கு முறை புரிந்து பார்க்கவும்.ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வகையில் கமல் கவரத்தான் செய்கிறார். ஜிகாதிகளுக்கு பயிற்சியளிக்கும் காட்சி அப்பப்பா !!!


நானும் ஒரு நாத்திகன் என்ற வகையில் எனக்கு கமலின் சில வசனங்கள் மிகவும் பிடிக்கும். தசாவதாரத்தில் கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன் இருந்தா நல்லா இருக்கும்ன்னு தானே சொல்றேன்னு சொல்லுற மாதிரி இதுலயும் சில வசனங்கள் என்னை கவர்ந்தது. எல்லாம் கடவுள் பார்த்துப்பார்ன்னு ஹீரோயின் சொல்லும் போது உடனே எந்த கடவுள் என்று கேட்பார். அதே போல ஹீரோயின் ஒரு இடத்தில் விசாரிக்கப்படும் போது ஒருவர் கேட்ப்பார் உங்க கடவுள் யார்ன்னு (ஆங்கிலத்தில்) அதற்கு ஹீரோயின் எங்க கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கும் என்பார் அதற்கு மற்றவர் அப்போ உங்க கடவுளை எப்படி சிலுவையில் அறைவீர்கள் என்பார்.. அதற்கு நாங்கள் அறைய மாட்டோம் கடலில் கரைத்து விடுவோம் என்பார். இது படத்தில் கமல் சொல்லவில்லை என்றாலும் கமல் கைவண்ணமே 

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒருவரின் பதிவை வாசித்தேன் 'தேவர் மகன்'ல "போய் புள்ள குட்டிங்கள படிக்கவையுங்கடா"ன்னு சொன்னதையே இதுல இங்கிலிஷ்ல சொல்லியிருக்கார்ன்னு சொல்லியிருந்தார் அது என்னவோ சரிதான் !!! 'தேவர் மகன்'ல ஜாதி பிரச்சினைக்காக சொல்லியிருப்பார் இதுல மதம் அவ்ளோதான். ஹேராம், விருமாண்டி வரிசையில் விஸ்வரூபமும் என்னை மிகவும் கவர்ந்தது படத்தில் சில குறைகள் இருந்தாலும் நான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசித்து பார்த்தேன். விஸ்வரூபம் 2 இல் தொடரும் என்று படத்தை முடித்திருப்பார். சீக்கிரத்தில் பார்ப்பதற்க்கு எல்லோரையும் போல நானும் ஆவலாகவே இருக்கிறேன். 

விஸ்வரூபம் - கமலின் விஸ்வரூபம்தான் 





Saturday, February 2, 2013

கடல் - எனது பார்வையில்



முதல்ல சொல்ல வேண்டியது மணிரத்னம் படம் பார்த்த உணர்வே வரல. மத்தபடி படம் பெருசா மனசுல நிக்கலைன்னாலும் பாக்குற வரைக்கும் போரடிக்காம பார்க்கலாம். முக்கியமா ராஜீவ் மேனன் கேமரா இல்லைன்னா படம் இல்லைன்னே சொல்லலாம் அவ்ளோ அழகு. அப்பப்போ மணிரத்னம் படம்ன்னு ஞாபகம் வர்றதுக்கு காரணமும் ராஜீவ் மேனன்தான்.அடுத்து கௌதம் கார்த்திக் !! சிரிக்கும் போது கார்த்திக் ஞாபகம்தான் வருது அதனாலேயே எனக்கு ரொம்ப பிடிச்சுது. நடிப்பும் நல்லாவே செய்திருக்காப்ல டான்ஸ் சண்டைக்காட்சி நடிப்பு எல்லாத்துலயுமே நல்லா பண்ணியிருக்காப்ல. சும்மாவா நவரச நாயகனோட மகனாச்சே. துளசி பொண்ணு கூட நல்லாவே இருக்கு. லவ் சீன் அவ்வளவா இல்லைன்னாலும் இந்த ஜோடி சூப்பரா இருக்கு.

படத்துல ஆழமான கதைன்னு எல்லாம் இல்ல அர்ஜுனும் அரவிந்தசாமியும் பாதிரியார் பள்ளில படிக்கிறாங்க. அரவிந்தசாமி இறைவனுக்கு கடமை செய்யணும்ன்னு படிக்கிறாரு அர்ஜுன் அதுக்கு எதிர்மாறு கடவுள்ன்னு எல்லாம் இல்ல நான் சாத்தான்னு சொல்லுறாரு குடும்ப கஷ்டத்தால படிக்கவந்தேன்னும் சொல்லுறாரு. ஒருதடவ அர்ஜுன் செய்த ஒரு தப்பை அரவிந்தசாமி நிர்வாகத்துக்கு சொன்னதுல அர்ஜுனை வெளிய அனுப்பிடுறாங்க. அப்போ அரவிந்தசாமியை பழிவாங்குவேன்னு சொல்லிட்டு கிளம்புறாரு அர்ஜுன். இதுக்கு மேல சொல்ல தேவைல கதை எப்பிடி போகும்ன்னு.

அப்புறமா கொஞ்ச காலத்துக்கு பிறகு அரவிந்தசாமி பாதிரியார் ஆகி ஒரு மீனவ கிராமத்துக்கு வர்றாரு. அங்க அனாதையா இருக்குற ஒரு சின்ன பையன் மேல பாசம் காட்டுறாரு. அது வழக்கம் போல நம்ம ஹீரோவாத்தானே இருக்கணும். அவரும் பெரியவன் ஆகிடுறாரு. சரி இப்பிடியே போய்க்கிட்டிருந்தா  எப்பிடின்னு பார்த்தா திடீர்ன்னு ஒருநாள் அர்ஜுனும் அரவிந்தசாமியும் சந்திச்சுகிறாங்க. அதுக்கப்புறம் படத்துல ஒரு திருப்பம் வருது அது படத்தோட பார்க்கும் போதுதான் நல்லா இருக்கும் 


அந்த திருப்பத்துக்கு அப்புறம் 
அரவிந்தசாமி நல்லவனா வளர்த்த ஹீரோவை நான் சாத்தான் ஆக்கி காட்டுறேன்னு அர்ஜுன் சொல்றாரு. கடைசில என்ன ஆகுதுங்கிறதுதான் மீதி கதை. ஹீரோ ஹீரொயினை விட படத்துல முக்கியமானது நம்ம அர்ஜுன், அரவிந்தசாமி ஜோடிதான். பாதிரியாரா வர்ற அரவிந்தசாமி கண்ணுல எவ்ளோ கருணை இருக்கோ அதை விட மேசக்காரன் பர்க்மன்ஸ்ன்னு வர்ற அர்ஜுன் கண்ணுல மிருகத்தனம் தெரியுது. ரெண்டு பேருமே சொல்லவே தேவைல போட்டிபோட்டு பின்னியிருக்காங்க. 

ஏலே கீச்சான், அடியே, மூங்கில் தோட்டம் மூணுமே அவ்ளோ அழகு அதுக்கும் ராஜீவ் மேனனை தான் பாராட்டணும். ட்ரெயிலர் பார்த்த பிறகே படம் புரிஞ்சு போச்சு அதனால நான் எப்பிடி படம் வரும்ன்னு எதிர்பார்த்து போனேனோ அதே மாதிரி வந்திருக்கு அதனால எனக்கு ஓகே.அர்ஜுன் அரவிந்தசாமிக்கு நடுவில இருக்குற போட்டியை வச்சு கதை நகர்ந்தாலும் அதுல விறுவிறுப்பு இல்லைன்னே சொல்லலாம். மணிரத்னம் படத்துல ஒரு அழுத்தமான திரைக்கதை இருக்கும் இதுல அப்பிடி எதுவுமே தெரியல. படம் ஆரம்பிக்கும் போதே இப்பிடித்தான் கதை போக போகுதுன்னு சுலபமா கண்டு பிடிக்க முடியுது. ஒரு அழுத்தமான கதையோட படம் எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் 



#கடல் - கடலோட அழகுக்காக பார்க்கலாம்

Tuesday, January 15, 2013

அலெக்ஸ் பாண்டியன் - கொலை வெறியுடன்



•இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் பவர் ஸ்டார் ஸ்டைல்ல நெஞ்சார மனதார நன்றிகள்...•


இந்த படத்துல கதை என்னன்னா .... அட போங்கடா !!அதை மட்டும் கேட்டீங்கன்னா கெட்ட வார்த்தைலையே திட்டுவேன் !!!! படம் ஆரம்பிச்ச உடன கார்த்தி ரயிலை துரத்திகிட்டு வரும் போதே படத்தை நிறுத்திட்டு போயிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்...
என்ன மனுசன்யா ரயில் கூட ஓடுறாரு, ஜீப்பை தூக்கி எறியுறாரு.. நல்ல வேளை ஆரம்பத்துல ஒரு ஹெலிஹாப்டர் சீன வரும் நான் கூட HULK ஸ்டைல்ல ஹெலியை தூக்கி எறிவாரோன்னு பயந்தேன் நல்ல வேளை அது நடக்கல.
ஏதோ ஒரு தெலுங்கு படத்துல பாலையா ரயில் மேல நின்னு "ஜெய் சண்டிகேசவா"ன்னு சொல்லி முன்னாடி கை கட்டுவாரு ரயில் பின்னாடி போகும் அந்த காமெடிய பூரா ஓவர் டேக் பண்ணிட்டாங்க!!! :P
சரி சந்தானம் வந்ததுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்ன்னு நினைச்சா அது அதை விட கொடுமை.. தமிழ் சினிமால வந்த பழைய காமெடிய பூரா தூசு தட்டி தொங்க விட்டிருக்காங்க.. ராமராஜன்-கவுண்டமணி காமெடில இருந்து
(அந்த காமெடி தெரியனும்ன்னா இதுல பாருங்க http://www.youtube.com/watch?v=tARSE7nv1oU) சந்தானதோட பழைய காமெடிகள் வரைக்கும் எல்லாமே தூசு கூட தட்டாம அப்பிடியே போட்டிருக்காங்க.
இதுல எங்க இருந்து சிரிப்பு வரும்.!!!

பின்குறிப்பு :- இதுல பெரிய காமெடி என்னான்னா படம் பார்த்துட்டு பிரெண்டுகிட்ட (Narmadan Hunter) சொன்னேன் நொந்து நூடில்ஸ் ஆயிட்டேண்டான்னு அதுக்கு அவன் கரெக்ட்டா கேட்டான் "அலெக்ஸ் பாண்டியன் பார்த்தியா"ன்னு யாரு பெத்த புள்ளையோ கரெக்ட்டா கேட்டிச்சு. இத்தினிக்கும் அவன் இன்னும் படம் பார்க்கல (குடுத்து வச்ச பயபுள்ள)

நானும் படம் மொக்கையா இருக்கும்ன்னு எதிர் பார்த்தேன் ஆனா இவ்ளோ மொக்கையா ரத்தம் வர்ற அளவுக்கு இருக்கும்னு எதிர்பாக்கல !!!!




Monday, November 19, 2012

கடல் புறா- (சாண்டில்யன்)


-கடல் புறா- (சாண்டில்யன்)


சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் பொதுவாக எல்லாவற்றையுமே ரசிப்பவன் நான். அதிலும் மிகவும் பிடித்த நாவல் என்றால் கடல் புறாவையே கூறுவேன். கடல் புறா மூன்று பாகங்களாக வெளிவந்தது. பலருக்கு பிடித்த நாவலாகவும் இருக்கிறது. அப்படி வந்த மூன்று பாகங்களையும் தொடர்ச்சியாக படித்து முடித்தவர்களில் நானும் ஒருவன். (கல்கியின் பொன்னியின் செல்வனும் ஐந்து பாகங்களாக வெளிவந்து பொதுவாக எல்லாரையும் கவர்ந்தது - எனக்கும் பிடித்தது) இணையத்தில் இப்போது கடல் புறாவின் மின்புத்தக பிரதி ஒன்றை கண்டேன். விரும்பி வாசித்த கதையின் சுவாரசியம் மீண்டும் தொற்றிக்கொண்டது. அதனாலேயே இந்த இடுகை.

இளைய பல்லவன் என்கிற கருணாகர பல்லவன், காஞ்சனா தேவி, அநபாயன், மஞ்சளழகி, அகூதா என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அமைத்த விதம் அருமை. 
போரின் திட்டங்களையும் தப்பிக்கும் உபாயங்களையும் கடல் கொள்ளை நுட்பங்களையும் ஒரு சேர கையாண்ட விதம் கதையோடு ஒன்றிக்க செய்து கட்டிப்போட கூடியது. அதிலும் கதை வாசித்து பல நாட்கள் ஆனா போதிலும் கடல் புற என்று கூறியவுடன் கடல் புறா எனும் கப்பலை வடிவமைத்து போர் புரியும் முறை திரைப்படம் போல் இன்றுவரை மனதில் ஓடுகிறது. ஸ்ரீ விஜயத்தை கைப்பற்றுவதற்காக போடும் ஒவ்வொரு திட்டங்களிலும் ஆசிரியரின் திறமையும் சேர்ந்து வெளிப்படுகிறது.

இது போன்ற கதைகளை திரைப்படமாக எடுத்தால் (நடிப்பதற்கு ஆட்கள் இல்லையே!!) நன்றாக இருக்கும். ஒரு ஆங்கில படத்துக்கு இணையாக - ஆங்கில படங்களை விட அருமையாக வடிவமைக்கப்பட்ட நாவல். காலம் பல சென்றாலும் கடல் புறாவின் சிறப்பு என்றும் மங்காது. திரைப்படமாக எடுத்து கதையின் தரத்தை குறைக்காமல் நாவலாகவே வைத்து ரசிப்பதே சிறப்பு !!!!!!!

-மகிந்தன்-

Sunday, November 18, 2012

துப்பாக்கி

துப்பாக்கி - எனது விமர்சனம் 




தொடர்ச்சியாக வந்த பெரிய படங்களால் நொந்து போயிருக்கும் போது துப்பாக்கி மூலம் அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது. சூர்யா அஜித் படங்கள் மண்ணை கவ்விய நிலையில் விஜய் படங்களில் மட்டும் புதிதாக என்ன இருந்து விட போகிறது என்ற சாதாரண தரப்பு ரசிகனின் கேள்விக்கு பதில் சொல்லி ஜெயித்திருக்கிது துப்பாக்கி. 

நீண்ட காலத்துக்கு பிறகு அலட்டல் இல்லாத விஜய்யை படத்தில் ரசிக்க முடிகிறது. காவலன் நண்பன் என இதற்கு முந்தைய படங்களில் இதே அல்லடல் இல்லாத நடிப்பை பார்த்திருந்தாலும் அவை ஏற்கனவே பார்த்த ரீமேக் படங்கள் என்பதால் முழுமையாக இந்த படத்திலே அலட்டல் இல்லாத அடுத்த வீட்டு பையன் போல் இருக்கும் விஜய்யை ரசிக்க முடிகிறது. 



படத்தின் கதை இதற்கு முதலே அடித்து துவைத்த தீவிரவாதம்தான் என்றாலும் தொய்வில்லாமல் படமாக்கிய விதத்தில் முருகதாஸ் ஜெயித்திருக்கிறார். ஏழாம் அறிவில் செய்தது போல் இல்லாமல் படத்தை விறு விறுப்பாக கொண்டு சென்றிருப்பது சபாஷ் !!!!

விஜய் - மேலே சொன்னது போல் அலட்டல் இல்லாத நடிப்பு, ஆரவாரம் இல்லாத ஆக்க்ஷன், குறும்புத்தனமான காதல் என்று எந்த இடத்திலும் முகல் சுளிக்க விடாமல் அழகாக செய்திருக்கிறார். ராணுவ உடை அதிகம் இல்லாத காரணத்தாலோ என்னவோ அதுவும் பெரிதான உறுத்தலாக தெரியவில்லை. ஆரவாரமான பஞ்ச் வசனங்கள் சவால் வசனங்கள் இல்லாமல் ராணுவம் பற்றி பேசும் இடங்களில் மீண்டும் விஜய்க்கு ஒரு சபாஷ்..!!!

காஜல் - காதல் காட்சியும் காமெடி காட்சியும் மட்டும்தான் என்றாலும் தனக்கான இடங்களில் அழகாகவே நடித்திருக்கிறார். 
வித்யுத் - அமைதியான வில்லனாக அழகாக நடித்திருக்கிறார். அதிலும் விஜய்யோடு போனில் பேசும் காட்சிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் வென்றிருக்கிறார். படத்தில் வில்லனுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை ஒரு படி உயர்த்தி காட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது

தீனா, ரமணாவில் இருந்த முருகதாஸ் கொஞ்ச காலமாக காணமல் போயிருந்தார் ஆனால் துப்பாக்கி மூலமாக மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஸ்லீப்பர் செல்ஸ் என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு படம் முழுவதையுமே சிறிதும் தொய்வின்றி கொண்டு செல்வது முருகதாசாலேயே முடியும். பொதுவாக ஷங்கர் படங்களில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் தேவையான விடயங்கள் இருக்கும். சங்கருக்கு பிறகு முருகதாஸ் ஜெயித்திருக்கிறார். முக்கியமாக விஜய்யை அலட்டல் இல்லாமல் நடிக்க வைத்ததில்!!

சந்தோஷ் சிவன் தனக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். விஜய்யின் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் படமாக்கிய விதம் அழகு. ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையை  மின்னலே, காக்க காக்க காலத்துக்கு பிறகு நான் ரசித்தேன். பல இடங்களில் சொதப்பியிருந்தாலும் விஜய் லேப்டாப்பில் மேப்பை கண்டு பிடிக்கும் காட்சிக்கு அளித்திருந்த பின்னணி இசை கவர்கிறது. 

பாடல்களில் ஆடியோவில் கூகுள் கூகுள் பாடலும் போய் வரவா பாடலும் மிகவும் கவர்ந்தது. படமாக்கிய விதத்திலும் எதுவும் குறை கூறுவதற்கு இல்லை. அந்தார்டிகா பாடல் விஜய்யின் குறும்புகளுக்க்காகவே ரசிக்க வைக்கிறது. போய் வரவா இறுதியில் நெகிழ வைக்கிறது.

முதலில் படம் காமெடி காதல் என்று போனாலும் பன்னிரண்டு தீவிரவாதிகளை ஒன்றாக கொல்லும் காட்சியோடு நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதன் பிறகு படத்தின் வேகம் படம் முடிந்த பிறகே தெரிகிறது எனலாம். வழக்கம் போல் மாடிக்கு மாடி தாவி நூறு பேரோடு சண்டை போடும் விஜய்யை காட்டாமல் அடக்கமாக ஆக்க்ஷன் பண்ணும் விஜய்யை ரசிக்க முடிகிறது. தங்கையை கடத்தி செல்லும் காட்சியில் வரும் சண்டையே அதற்கு உதாரணம். கிளைமாக்ஸ் காட்சியிலும் நூறு தீவிரவாதிகளோடு தனியாளாக சண்டை, சண்டை முடிந்த பின் ஒரு பக்கத்துக்கு நாட்டுக்கு அட்வைஸ் என்று இல்லாமல் அமைதியாக முடித்தது அழகாக இருக்கிறது

மொத்தத்தில் மீண்டும் விஜய்யை நல்ல நடிகனாக பார்த்ததில் விஜய் ரசிகனாக மகிழ்ச்சி. ஒரு தரமான சினிமாவை ரசிக்கும் படியாக தந்ததற்காக முருகதாசுக்கு நன்றி 

( மகிந்தன் )