முதல்ல சொல்ல வேண்டியது மணிரத்னம் படம் பார்த்த உணர்வே வரல. மத்தபடி படம் பெருசா மனசுல நிக்கலைன்னாலும் பாக்குற வரைக்கும் போரடிக்காம பார்க்கலாம். முக்கியமா ராஜீவ் மேனன் கேமரா இல்லைன்னா படம் இல்லைன்னே சொல்லலாம் அவ்ளோ அழகு. அப்பப்போ மணிரத்னம் படம்ன்னு ஞாபகம் வர்றதுக்கு காரணமும் ராஜீவ் மேனன்தான்.அடுத்து கௌதம் கார்த்திக் !! சிரிக்கும் போது கார்த்திக் ஞாபகம்தான் வருது அதனாலேயே எனக்கு ரொம்ப பிடிச்சுது. நடிப்பும் நல்லாவே செய்திருக்காப்ல டான்ஸ் சண்டைக்காட்சி நடிப்பு எல்லாத்துலயுமே நல்லா பண்ணியிருக்காப்ல. சும்மாவா நவரச நாயகனோட மகனாச்சே. துளசி பொண்ணு கூட நல்லாவே இருக்கு. லவ் சீன் அவ்வளவா இல்லைன்னாலும் இந்த ஜோடி சூப்பரா இருக்கு.
படத்துல ஆழமான கதைன்னு எல்லாம் இல்ல அர்ஜுனும் அரவிந்தசாமியும் பாதிரியார் பள்ளில படிக்கிறாங்க. அரவிந்தசாமி இறைவனுக்கு கடமை செய்யணும்ன்னு படிக்கிறாரு அர்ஜுன் அதுக்கு எதிர்மாறு கடவுள்ன்னு எல்லாம் இல்ல நான் சாத்தான்னு சொல்லுறாரு குடும்ப கஷ்டத்தால படிக்கவந்தேன்னும் சொல்லுறாரு. ஒருதடவ அர்ஜுன் செய்த ஒரு தப்பை அரவிந்தசாமி நிர்வாகத்துக்கு சொன்னதுல அர்ஜுனை வெளிய அனுப்பிடுறாங்க. அப்போ அரவிந்தசாமியை பழிவாங்குவேன்னு சொல்லிட்டு கிளம்புறாரு அர்ஜுன். இதுக்கு மேல சொல்ல தேவைல கதை எப்பிடி போகும்ன்னு.
அப்புறமா கொஞ்ச காலத்துக்கு பிறகு அரவிந்தசாமி பாதிரியார் ஆகி ஒரு மீனவ கிராமத்துக்கு வர்றாரு. அங்க அனாதையா இருக்குற ஒரு சின்ன பையன் மேல பாசம் காட்டுறாரு. அது வழக்கம் போல நம்ம ஹீரோவாத்தானே இருக்கணும். அவரும் பெரியவன் ஆகிடுறாரு. சரி இப்பிடியே போய்க்கிட்டிருந்தா எப்பிடின்னு பார்த்தா திடீர்ன்னு ஒருநாள் அர்ஜுனும் அரவிந்தசாமியும் சந்திச்சுகிறாங்க. அதுக்கப்புறம் படத்துல ஒரு திருப்பம் வருது அது படத்தோட பார்க்கும் போதுதான் நல்லா இருக்கும் அந்த திருப்பத்துக்கு அப்புறம்
அரவிந்தசாமி நல்லவனா வளர்த்த ஹீரோவை நான் சாத்தான் ஆக்கி காட்டுறேன்னு அர்ஜுன் சொல்றாரு. கடைசில என்ன ஆகுதுங்கிறதுதான் மீதி கதை. ஹீரோ ஹீரொயினை விட படத்துல முக்கியமானது நம்ம அர்ஜுன், அரவிந்தசாமி ஜோடிதான். பாதிரியாரா வர்ற அரவிந்தசாமி கண்ணுல எவ்ளோ கருணை இருக்கோ அதை விட மேசக்காரன் பர்க்மன்ஸ்ன்னு வர்ற அர்ஜுன் கண்ணுல மிருகத்தனம் தெரியுது. ரெண்டு பேருமே சொல்லவே தேவைல போட்டிபோட்டு பின்னியிருக்காங்க. ஏலே கீச்சான், அடியே, மூங்கில் தோட்டம் மூணுமே அவ்ளோ அழகு அதுக்கும் ராஜீவ் மேனனை தான் பாராட்டணும். ட்ரெயிலர் பார்த்த பிறகே படம் புரிஞ்சு போச்சு அதனால நான் எப்பிடி படம் வரும்ன்னு எதிர்பார்த்து போனேனோ அதே மாதிரி வந்திருக்கு அதனால எனக்கு ஓகே.அர்ஜுன் அரவிந்தசாமிக்கு நடுவில இருக்குற போட்டியை வச்சு கதை நகர்ந்தாலும் அதுல விறுவிறுப்பு இல்லைன்னே சொல்லலாம். மணிரத்னம் படத்துல ஒரு அழுத்தமான திரைக்கதை இருக்கும் இதுல அப்பிடி எதுவுமே தெரியல. படம் ஆரம்பிக்கும் போதே இப்பிடித்தான் கதை போக போகுதுன்னு சுலபமா கண்டு பிடிக்க முடியுது. ஒரு அழுத்தமான கதையோட படம் எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும்
#கடல் - கடலோட அழகுக்காக பார்க்கலாம்

No comments:
Post a Comment