Tuesday, January 15, 2013
அலெக்ஸ் பாண்டியன் - கொலை வெறியுடன்
•இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் பவர் ஸ்டார் ஸ்டைல்ல நெஞ்சார மனதார நன்றிகள்...•
இந்த படத்துல கதை என்னன்னா .... அட போங்கடா !!அதை மட்டும் கேட்டீங்கன்னா கெட்ட வார்த்தைலையே திட்டுவேன் !!!! படம் ஆரம்பிச்ச உடன கார்த்தி ரயிலை துரத்திகிட்டு வரும் போதே படத்தை நிறுத்திட்டு போயிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்...
என்ன மனுசன்யா ரயில் கூட ஓடுறாரு, ஜீப்பை தூக்கி எறியுறாரு.. நல்ல வேளை ஆரம்பத்துல ஒரு ஹெலிஹாப்டர் சீன வரும் நான் கூட HULK ஸ்டைல்ல ஹெலியை தூக்கி எறிவாரோன்னு பயந்தேன் நல்ல வேளை அது நடக்கல.
ஏதோ ஒரு தெலுங்கு படத்துல பாலையா ரயில் மேல நின்னு "ஜெய் சண்டிகேசவா"ன்னு சொல்லி முன்னாடி கை கட்டுவாரு ரயில் பின்னாடி போகும் அந்த காமெடிய பூரா ஓவர் டேக் பண்ணிட்டாங்க!!! :P
சரி சந்தானம் வந்ததுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்ன்னு நினைச்சா அது அதை விட கொடுமை.. தமிழ் சினிமால வந்த பழைய காமெடிய பூரா தூசு தட்டி தொங்க விட்டிருக்காங்க.. ராமராஜன்-கவுண்டமணி காமெடில இருந்து
(அந்த காமெடி தெரியனும்ன்னா இதுல பாருங்க http://www.youtube.com/watch?v=tARSE7nv1oU) சந்தானதோட பழைய காமெடிகள் வரைக்கும் எல்லாமே தூசு கூட தட்டாம அப்பிடியே போட்டிருக்காங்க.
இதுல எங்க இருந்து சிரிப்பு வரும்.!!!
பின்குறிப்பு :- இதுல பெரிய காமெடி என்னான்னா படம் பார்த்துட்டு பிரெண்டுகிட்ட (Narmadan Hunter) சொன்னேன் நொந்து நூடில்ஸ் ஆயிட்டேண்டான்னு அதுக்கு அவன் கரெக்ட்டா கேட்டான் "அலெக்ஸ் பாண்டியன் பார்த்தியா"ன்னு யாரு பெத்த புள்ளையோ கரெக்ட்டா கேட்டிச்சு. இத்தினிக்கும் அவன் இன்னும் படம் பார்க்கல (குடுத்து வச்ச பயபுள்ள)
நானும் படம் மொக்கையா இருக்கும்ன்னு எதிர் பார்த்தேன் ஆனா இவ்ளோ மொக்கையா ரத்தம் வர்ற அளவுக்கு இருக்கும்னு எதிர்பாக்கல !!!!
Subscribe to:
Posts (Atom)
