எத்தனை விமர்சனம் வாசிச்சிருந்தாலும் நம்ம புத்திக்கு எட்டினது இம்புட்டுத்தான் ...
வாங்கலே !!!
PLUS :-
• எனக்கு இந்த படத்துலையே உடன பிடிச்சதுன்னு சொல்ல கூடியது சூர்யாவோட டான்ஸ் இதுக்கு முதல் வந்த எல்லா படங்களை விடவும் நல்லா இருக்கு (முக்கியமா சிங்கம் டான்ஸ்ல)
• சந்தானம் & விவேக் காமெடி
• ஹரியோட வேகமான திரைக்கதை
• இது எல்லாத்தையும் விட முக்கியமா "சூர்யா" என்னதான் சூர்யாவை மொக்கை பண்ணினாலும் இந்த கேரக்டரை சூர்யாவை விட யாரும் நல்லா பண்ணியிருக்க முடியாது !!
• அனுஷ்கா (ஹி ஹி ஹி அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல இது ப்ளஸ்ஸாதான்பா தெரியுது)
MINUS :-
• வில்லன்ஸ் (அமெரிக்கா அந்தார்டிக்கா தவிர எல்லா நாட்டுல இருந்தும் வர்றாங்க)
• சண்டை காட்சிகள் (முன்ன எல்லாம் விஜய் படத்துல எதையெல்லாம் நக்கல் பண்ணுவாங்களோ அதெல்லாத்தையும் கரெக்ட்டா பாலோ பண்ணியிருக்காங்க)
• பஞ்ச் வசனங்கள் (அடிக்கடி கேப்டனோட விருதகிரி படம் இந்த பாழப்போன புத்தியில வந்து பெல் அடிக்குது முக்கியமா ஆபிரிக்க வில்லன்கிட்ட போன்ல சவால் விடுற சீனல வேணாம் மகி வேணாம் மகின்னு கெஞ்சினாலும் பாழாப்போன புத்தி கேக்க மாட்டேங்குதே)
• சாதாரண வசனங்கள் (அதையும் சூர்யா பஞ்ச் மாதிரியே சொல்லுறதால எது என்ன பீலிங்ல சொல்லுறார்னு பிரிச்சு பார்த்து புரிஞ்சுக்க முடியல)
• தேவி ஸ்ரீ பிரசாத் (சூர்யா 'டி.எஸ்.பி'யா கத்துறதை கூட சகிச்சுக்கலாம் போல இருக்கு இந்த 'டி.எஸ்.பி' போட்ட மியூசிக் சகிச்சுக்க முடியல "சிங்கம் டான்ஸ்" தவிர எந்த பாடலுமே நல்லா இல்ல பேக்ரவுண்ட் மியூசிக் காதுல ஈயம் காய்ச்சி ஊத்தின பீலிங்)
• ஹன்சிகா (சத்தியமா ஜீரணிக்க முடியல !!!)
• இது எல்லாத்தையும் விட முக்கியமான குறை நம்ம மயில்வாகனம் படத்துல இல்லாததுதான். சிங்கம் I ல அவசரப்பட்டு கொன்னுட்டாங்க அதனால தானோ என்னவோ இதுல ஒரு வில்லனையுமே கொல்லாம விட்டிருக்காங்க சிங்கம் III க்கு ப்ளான் பண்ணுறாங்களோ என்னவோ !! நடக்கிறது நடக்கட்டும்

இதே தான் எனது கருத்தும். ஆனா அந்த சந்தானம் + விவேக் காமெடியை ப்ளஸ் ஆ ஏத்துக்கமுடியல்ல. எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் தேவையில்லாத கேரக்டர் போலதான் தெரிஞ்சுது...
ReplyDeleteஅப்புறம் விமர்சனம் நல்லாயிருக்கு.. நீட்டி முழங்காம பாயிண்ட்ஸை மட்டும் சுருக்கமா சொல்லிட்டிங்க :)
படத்துல ஏகப்பட்ட தேவையில்லாத கேரக்டர் இருக்கு. அவங்களோட பார்க்கும் போது இந்த ரெண்டு பேரும் முக்கியமா சந்தானம் தேவையில்லாம வர்றது அப்பிடி ஒண்ணும் தப்பா தெரியல !!!
Delete